தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம்,
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முதல் முறையாக 23 தண்டனை கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கில் 3 பணி நேரங்களில் கைதிகள் பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மாத ஊதியமும் வழங்கப்பட உள்ளது.
சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட போர்வை, துண்டு, காக்கி துணி மற்றும் உணவு பண்டங்களும் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.