முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரையும், அவர்களது படகுகளுடன் கைது செய்தனர்.

அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளது.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மண்டபம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது