தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவர் பதவியை ஆளுநர் ஆர்.என்.ரவி வகித்து வருவதை எதிர்த்து ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாகக் கூறி தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
