தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் விண்ணப்பத்தை பதிவு செய்ய www.tngasa.in மற்றும் www.tndceonline.org ஆகிய இணையதளங்கள் மூலமாக ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான சந்தேகங்களில் இருப்பின் 044 22351014, 044 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.