முக்கிய செய்திகள்

அரசுத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்காக வரும் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் 33 மையங்களில் நடத்தப்படும்.

இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.