
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள சிவதாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக பதவியேற்பார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளிட்டது.
