தமிழக அரசு 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு
* பெட்ரோல் பங்க் காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தளர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கேஸ் விநியோகம், நியாயவிலை கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
* உணவககங்களில் உணவு பொருட்களை தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
* ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சி, அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் இயங்கும்
* கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும்
* மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி
* தலைமைச்செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்
* மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி.
தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது