தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதா விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல்,
இந்திய ஏற்றுமதி, இறக்குதி வங்கிக்கான அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
6 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதனம் அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று அடுத்த 3 ஆண்டுகளில் 3639 கோடி ரூபாய் செலவில் 13 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும், ஜம்மு காஷ்மீரில் 2 பல்கலைக்கழங்களும் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அசாம் மாநிலம் நுமலிகரிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஆண்டுக்கு 90 லட்சம் டன் உற்பத்தி செய்யும் விதத்தில்
22 ஆயிரத்து 594 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள பியூஷ்கோயல் தெரிவித்தார்.