தமிழகம்,புதுவையில் 5 அகில இந்திய வானொலி நிலையங்களில் சுய ஒலிபரப்பிற்கு தடையா..

அகில இந்திய வானொலியில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 5 வானொலி நிலையங்கள் அஞ்சல் நிலையங்களாக தரம் குறைக்கப்பட உள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசார் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலி இயங்கி வருகிறது. இதில் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் தமிழகத்தின் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு உள்ளூர் வானொலி நிலையங்கள் அஞ்சல் செய்யும் நிலையங்களாக அதாவது ரிலே ஸ்டேஷன்களாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய வருவாய் இல்லாததால் இந்த நடவடிக்கையை பிரசார் பாரதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கூறப்பட்ட அந்த 4 நிலையங்கள் தற்போது வரை உள்ளூர் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் உள்ளூர் வானொலி நிலையங்களாக உள்ளன.

இவை வரும் 3ம் தேதி முதல் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும் நிலையங்களாக தரம் குறைக்கப்படுவதால் சென்னை தலைமை நிலையத்தை சார்ந்தே பெரிதும் செயல்பட வேண்டியிருக்கும்.

அஞ்சல் செய்யும் நிலையங்களாக தரம் குறைக்கும்பட்சத்தில் உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் செய்திகளை மக்கள் அறிந்துகொள்ள இயலாத சூழல் ஏற்படும் என்ற அச்சமும் நேயர்களிடையே எழுந்துள்ளது. பிரசார் பாரதியின் இந்த தகுதி குறைப்பு முயற்சியால் அங்கு பணியில் உள்ளோர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே பாணியில் அசாமில் பிரசார் பாரதி எடுத்த முடிவுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மீண்டும் உள்ளூர் நிகழ்வுகள் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

“தமிழகம்,புதுவையில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

Recent Posts