”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அதற்காக தமிழக மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வினால், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துவிட்டதாக பேசிய அவர், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வேளாண் சட்டங்களை, தமிழக முதலமைச்சர் மட்டுமே ஆதரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாகவும், வீட்டில் ஒருவருக்கு வேலையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மகளிர் சுய உதவிக்குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..

திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி…

Recent Posts