தமிழகத்தில் குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, நாமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 1 ந்தேதி தென்மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 2,3 தேதிகளில் வட மற்றும் உள் மாவட்டங்களில் மழைபய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தள்ளது.

இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..

மகாவீர் நிர்வான் முன்னிட்டு நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

Recent Posts