தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 33,850. 136 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 63,380. தமிழகத்தில் 25 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவரை 12,746 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், நேற்று வரை 1,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்றைக்கு புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 98 பேரில் 91 பேருக்கு நேரடியாக பாதிப்பு உருவாகியுள்ளது. மீதமுள்ள 7 பேர் பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

மொத்தம் பாதிப்பு: 1,173

மொத்தம் பலி: 11

மொத்தம் குணமடைந்தோர்: 58

பாதிக்கப்பட்டவர்களில் இன்றைய நிலவரப்படி யாரும் வென்டிலேட்டரில் இல்லை” என்றார்.

தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்…

Recent Posts