தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்! செய்யப்பட்டள்ளார்.
தலைமைச் செயலர் க.சண்முகம் இன்று ஓய்வுப்பெறுவதை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சண்முகம் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் சண்முகம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி நியமிக்கப்பட்டார். சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிறந்தவர்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் சிவில் தேர்வு? எழுதி இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985-ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
தொடர்ந்து நிதித்துறைச் செயலராக தொடர்ந்த அவர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலை.31-டன் முடிவடைந்தது. ஆனாலும் இருமுறை பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று ஓய்வுப்பெற்றார்.
மூத்த அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளில் முதலில் இருந்த ராஜீவ் ரஞ்சன் அயல்பணியில் இருந்தார். இந்நிலையில் சண்முகம் ஓய்வை அடுத்து சீனியர் ஐஏஸ் அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் 47-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவர் மத்திய அரசு அயல்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜீவ் ரஞ்சன் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி மற்றும் அறிசார் சொத்துரிமை பிரிவில் பிஎச்டி (டாக்டர்) பட்டம் வாங்கியுள்ளார். ஐஐஎம்மில் எம்பிஏ முடித்துள்ளார், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில் பப்ளிக் பாலிசியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் கேடராக துணை ஆட்சியராக பணியைத்தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் படிப்படியாக பல முக்கிய பதவிகளை வகித்தார்.
2001 முதல் 2007 வரை 7 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசுப்பணியில் பணியாற்றினார். 2007-ல் இணைச் செயலாளர் அந்தஸ்த்துக்கு உயர்வு பெற்றார். 2009 முதல் முதன்மைச் செயலராக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவ்ர். ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்புச் செயலராக 2019 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்தார். இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெறுகிறார்.
தர்போது தலைமைச் செயலராக இருந்து ஓய்வுபெறும் க.சண்முகத்தின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவரை தமிழக அரசின் ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது