தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28,711. மேலும், 135 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68,519. தமிழகத்தில் 16 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் என 25 ஆய்வகங்கள் உள்ளன.

இதுவரை 19,255 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேருக்கு நேரடி பாதிப்பு, ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர். எஞ்சிய 9 பேரும் வெளிநாட்டுக்குச் சென்றவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள்.

இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9, சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 31 பேரில் 15 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். மேலும், 8 பேர் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். மொத்தமாக தமிழகத்தில் குழந்தைகள் 33 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 23. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 81. உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.

‘ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாதிப்பு: 1,204

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 12

குணமடைந்தோர் எண்ணிக்கை: 81

திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் காவல்துறை நோட்டீஸ்…

அனைத்துக்கட்சி கூட்டம் 16ம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக அறிவிப்பு..!

Recent Posts