தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .

தமிழகத்தில் இதுவரை 19372 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 710 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 117 பேருக்கும் என மொத்தம் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த அளவு இதுவரை இல்லாததாகும். அதேப்போல், இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 639 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்கள் படி, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 10548 ஆகும். இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர் .உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 11607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட அளவில், சென்னை 559 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருவள்ளூரில் 38 பேருக்கும், திருவண்ணாமலையில் 16 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 19 பேருக்கும், சேலத்தில் 7 பேருக்கும் மதுரையில் 8 பேருக்கும், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

ஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா? : சோனியா காந்தி..

Recent Posts