தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போன்று பென்னாகரம் சுற்றுவட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வெள்ளேரி, சங்கீதவாடி, மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள குள்ளம்பாளையம்,செங்கோட்டையன் நகர், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காரப்பட்டு, ஊமையனூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரமாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன.