தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா


காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவமதிப்பு வழக்கில் விசாரணை நடக்க உள்ள நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.