
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். பருவமழை குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், சிட்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதி வரை தமிழகம்,புதுவையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று கூறினார்.