தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட்:
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம், அதன் இணைய தளத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் நான்கு மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ரெட் அலர்ட் 4 மாவட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இது பொருந்தாது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், 21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.