வடதமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய வங்க கடலில் ஊருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக வடதமிழகம், புதுவையில்  அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.

மன்னார் வளைகுடா, வடதமிழகம், ஆந்திர கடற்கரை பகுதிகளில் 40 – 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது : உச்சநீதிமன்றம் கருத்து

சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி நிறுத்தி வைப்பு?….

Recent Posts