தமிழகத்தில் சிறு கோயில்கள், கிராம கோயில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்கள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்ககனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறு கோயில்கள், கிராம கோயில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். துக்க நிகழ்வுகளிலும் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் உள்ள சென்னயைில் சலுான் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களிலும் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் எதுவுமின்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு

மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு

சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு

சென்னை மாநகராட்சி,மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி
பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்

பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு- ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை

மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை