தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்..

அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம்,

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மையம் கூறியுள்ளது.