தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை முதல் திறப்பு..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

டாஸ்மாக்கை திறக்க உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மது வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை டோக்கன் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது.

சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்பட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கவும், குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் 3-ஆம் கட்ட திட்டங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Recent Posts