வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

பருவமழை பொய்த்து, வெயில் அதிகரித்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் 7 செ.மீ. மழையும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூர், திருச்சி, மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது

தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது : ப.சிதம்பரம் டுவீட்..

ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

Recent Posts