தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் .. மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது.

73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையி டப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,378 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 20,857 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,351 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 809 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பில், மற்ற மாவட்டங்களை விட சென்னை தான் தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில், இன்று தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் சென்னையில் மட்டும் 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 82 பேர், தூத்துக்குடியில் 51 பேர், திருவள்ளூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை..

கலைஞரின் 97-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

Recent Posts