
தமிழகத்தில் மேலும் 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,586-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,47,335- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,369- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1289 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168689-ஆக அதிகரித்துள்ளது.