
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைத்து மக்களும் தடுப்பூசி போட மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் 7-முறை 50000-திற்கும் அதிகமான முகாம்கள் மூலம் ஒரு கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. 8-வது முறையாக தடுப்பூசி முகாம் நாளை 6-ந்தேதி அதாவது சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. நாளை விடுமுறை காரணமாக தற்போது அது வரும் நவம்பர்-14-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.