வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் 2 நாட்களுக்கு தென்கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.