முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழை அதிகப்படியாகப் பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.