முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் பல மாவட்டங்களில் மழை..

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம்,புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, திருவான்மியூர், சைதாப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. பல மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது

தேனி மாவட்டம் அல்லிநகரம் மற்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

நாகை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுரை,கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

புதுவை காரைக்கால் மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது

மதுரையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது.