முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..


வங்க கடலில் அந்தமானுக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை வட தமிழகம் ,தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த மண்டலமாக மாறி வர வாய்ப்புள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் டிச.,4 ந்தேதி (திங்கட்கிழமை)முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.