தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்தரன் தெரிவித்திருந்தார்.
அதன் படி இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது.சென்னையில் இரவெல்லாம் மழை பெய்து வருகிறது.
புதன் கிழமை செய்தியாளா்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறுகையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்யும்.
முதலில் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மற்ற இடங்களில் பின்னர் தொடங்கும். எண்ணூர், மகாபலிபுரம், பொன்னேரியில் தலா 5 செ.மீ, மழைப் பதிவாகி உள்ளது.
கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் கூடுதலாக 12% மழைப்பொழிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழன் கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.
படிப்படியாக உட்புறப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.