
நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை விடைபெற்றதை தொடர்ந்து தமிழகம்,புதுச்சேரி, கேரளா, தென் ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை நிலைய அதிகாரி பாலசந்திரன் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவாரூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.