முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.