தமிழகம்,புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை..

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறி ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு இன்று முதல் ஆய்வு

ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

Recent Posts