தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறைக்கு மாற்றம்

தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரப்பதிவு துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை மாவட்ட ஆட்சியராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிகரன், நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் விநியோக துறை சிறப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக இருந்த உமா மகேஷ்வரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர் வாரிய இணை மேலாண் இயக்குநர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.