தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..

தஞ்சை பெரிய கோவிலில் தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் பாரம்பரியம் கொண்டது என்றும் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், அதன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றனர்.

எனவே கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,

மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

நிகழ்ச்சிகள் மதப்படியும், கோவில் சம்பிரதாயப்படியும் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கோவிலின் பழமை, பாரம்பரித்துக்கும், பழங்கால தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர்.