ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது.

தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். நோட்டீசுக்கு பதிலளிக்க இருவார காலம் அவகாசம் தந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை.

8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாங்களா மனம் மாறி உங்க பக்கம் வந்திருக்கோம்: ஸ்டாலினிடம் மனம் திறந்து பேசும் பெண்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளி சாதனை..

Recent Posts