முக்கிய செய்திகள்

திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ்!

சமூகநீதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர ராவ்

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

(27-11-2017) திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் , சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து, இடஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் அதிகாரம் கொடுக்கப் பட வேண்டும் என்று டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்தவிருக்கும் பேரணிக்கு கலைஞரின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், கலைஞரின் உடல்நலன் குறித்து விசாரித்த சந்திரசேகர் ராவ், சென்னை வரும்போது கலைஞரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். சமூகநீதிக்காக போராடும் அவரது வருகைக்காக கலைஞரின் இல்லக் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Telengana Chief Minister Chndrashekar  Rao Thanks To DMK