தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் இறுதி நாளில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டனர்.

தெலங்கானாவில் ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்த தீவிர பரப்புரை செய்தனர்.

ராஜஸ்தானில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் 130 தொகுதிகளில் நேரடி பலப்பரிட்சை நடத்துகின்றன.

அம்மாநிலத்தில் தவுசா (Dausa) நகரில் பரப்புரை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மேடையில் வைக்கப்பட்டிருந்த முரசை அடித்து கூட்டத்தினரைக் கவர்ந்தார்.