
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. ஆடல்,பாடல் நிகழ்வில் பங்கேற்பவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும், இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.