சிலைகள் காணாமல் போவது குறித்து கோயில் அர்ச்சகர்கள் அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை என ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கோயிலிலர் மாயமான சிலைக்கு பதில் புதிய சிலை வைக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
மேலும் இந்து சமய அறநிலைத்துறை 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றாமல் இயந்திரத்தன்மையுடன் பணியாற்றுவதாக உயர்நீதிமன்றம் புகார் அளித்துள்ளது.
மயிலாப்பூர் கோயில் சிலைக்கடத்தல் தொடர்பான புதிய வழக்கில் நீதிபதிகள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.