ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த எண்கவுண்டர் சம்பவத்தில் 5 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுக்காப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற போது, கிராமத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். பிறகு பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இடங்களில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் சில வீரர்களை பார்த்து சுடத் தொடங்கினர்.
இதனால் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடம் எதிர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சண்டை எழுந்தது. இதில், எதிர்பாராத விதமாக 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.