தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை…

புத்த பூர்ணிமா தினத்தன்று தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத் உல் முஜாகிதீனோ, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போ தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்து மற்றும் புத்த கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இலங்கையில் மிகப்பெரிய தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாக சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், தாங்கள் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: நாராயணசாமி திட்டவட்டம்

Recent Posts