முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு : 27 பேர் உயிரிழப்பு..


அமெரிக்காவில் தெற்கு டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் 27-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை டெக்சாஸ் மாகாண போலீஸ் சுட்டுப் பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.