
காரைக்குடி சந்திப்பு இரயில் நிலையத்தில்” அம்ருத் திட்டம்” முலம் நடைபெற்று வரும் பணிகளான புதிய மேம்பாலம், நகரும்படிகள், மின்தூக்கி பணிகளுக்கு கூடுதல் மதிப்பீடாக 13.57 கோடி ஒதுக்கி நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய காரைக்குடிக்கு வருகை தந்தார் மதுரை கோட்ட மேலாளார்.

புதிய தோற்றத்துடன் அனைத்த வசதிகளையும் உள்ளடக்கிய காரைக்குடி சந்திப்பு வரும் 2024 மார்ச்க்குள் முடியும் என கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
தை பூச திருவிழாவை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து மதுரை வழியாக பழனிக்கு சிறப்பு இரயில் இயக்க வலியுறுத்தி காரைக்குடி தொழில் வணிகக் கழகம், இரயில் வட்டார பயணிகள் நலச்சங்கம், கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில்
வருகின்ற சபரிமலை மண்டல பூஜை, மகரஜோதி திருவிழா மற்றும் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகிற டிச- 17 முதல் ஜனவரி (2024)17 வரையிலும், தைப்பூசத்திற்கு 2024 ஜனவரி 21 முதல் 27 வரையிலும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியில் எர்ணாகுளம் மற்றும் பழனிக்கும் சிறப்பு ரயிலை இயக்கி அனைத்து நிலையங்களில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் தலைவர் சாமி திராவிடமணி,செயலாளர் எஸ்.கண்ணப்பன்,இரயில் பயணிகள் நலச் சங்க ஒருங்கிணைப்பளார் பாலசுப்பிரமணியம், கானாடுகாத்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் இராதிகா ஆகியோர் வரவேற்று மேற்கண்ட கொரிக்கை மனுவை அளித்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்