முக்கிய செய்திகள்

தாய்லாந்து இளவரசி அரசியலில் குதித்தார் : அரசர் கடும் எதிர்ப்பு..

தாய்லாந்தில் இளவரசி அரசியலில் இறங்கி பிரதமராகும் முயற்சிக்கு அந்நாட்டு அரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் ((Bhumibol Adulyadej)) முதல் குழந்தையாகப் பிறந்தவர் உபால்ரத்னா ((Ubolratana)). 67 வயதான இவர் தாய்லாந்து இளவரசியாக உள்ளார்.

பீட்டர் ஜென்சன் என்ற அமெரிக்கரைத் திருமணம் செய்து கொள்ள அரச பதவிகளை இழந்தார். இருவருக்கும் விவாகரத்தாகி தாய்லாந்து திரும்பிய நிலையில் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் மகனைப் பறிகொடுத்தார்.

அவர் அரண்மனைக்குத் திரும்பாத போதிலும் இன்றளவிலும் அரசு குடும்பத்தினராகவே பார்க்கப்படுகிறார்.

திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிப்பது, மேடைகளில் பாடுவது, என மக்களிடையே பிரபலமான அவர் திடீரென பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதற்கு அவரது இளைய சகோதரரும் அரசருமான வைஜ்ரலங்கோன் ((Vajiralongkorn)) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தாம் சாதாரண குடிமகளாக போட்டியிடுவதாக உபோல் ரத்னா பதிலளித்துள்ளார்.