தைப்பூச திருவிழா: மலேசிய பத்துமலையில் கொண்டாட்டம்..


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கியது.

ரதம் பத்து மலை நோக்கி கோலாலம்பூரின் முக்கிய சாலை வழியாக செல்கிறது. பல லட்சம் பக்தர்கள் ரதத்துடன் நடந்து செல்கின்றனர். வழியெங்கும் தமிழர்கள், சீனர்கள் என பல சமுதாயமக்கள் முருகனை வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பலவகையான அன்னதானங்கள் வழங்கப்படுகின்றன.

ரதம் பத்து மலை சென்றவுடன் அங்கு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. சீனர்கள் வேல்குத்தி காவடி எடுக்கும் காட்சி காண்போரை மெய்சிலர்க்க வைக்கும்.

தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மலேசியாவின் மற்றொரு மாநிலமான பினாங் தீவிலும் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன: டெல்லி உயர்நீதிமன்றம்..

நாளை வானில் நீல நிலா காணத் தவறாதீர்..

Recent Posts