தைப்பூச திருவிழா தமிழ் கடவுள் முருகனை வழிபடும்நாளாகும். தமிழகத்தில் பழநி உட்பட அனைத்து கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போல் தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா,சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட வருகிறது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற இயற்கை குடவறைக் கோயிலான பத்துமலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று மலேசிய நேரப்படி இரவு 10 மணிக்கு கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயிலில் இருந்து வெள்ளி ரதம் முக்கிய சாலைகள் வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இன்று மதியம் பத்துமலையை ரதம் அடையும். பின்பு பக்தர்கள் காவடி,பால் குடம் எடுத்து நேர்திக்கடனை நிறைவேற்றுவர்.
வெள்ளி ரதம் சாலைகள் எங்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான சீனர்களும் முருகனுக்கு அர்ச்சனை செய்தனர்.
குடிதண்ணீர் முதல் அனைத்து அன்னதானங்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டள்ளன.
லட்சக்கணக்கான பக்தர்கள் ரதம் செல்லம் வழியில் பத்த மலை நோக்கி செல்கின்றனர்.
இது போல் பினாங்க் தண்ணீர் மலை முருகன் கோயிலிலும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது.