தலைமன்னார், காங்கேசன் துறையிலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை பிரதமர் தகவல்

இலங்கையில் உள்ள தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறையிலிருந்து தமி ழகத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க உள் ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித் துள்ளார்.

இந்தியா-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்கு வரத்து ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கை தலைமன்னாருக்கும் 24.02.1914 அன்று தொடங்கப்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு வகையான பண்டங் களையும், சரக்குகளையும் தலைமன்னார் வரை கப்பலிலும் அதனைத் தொடர்ந்து ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்று,

கொழும்பிலிருந்து எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட் ரானிக்ஸ் பொருட்களை கொள் முதல் செய்து வந்தனர். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதாரம் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால், இலங்கை தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதை முற்றிலுமாக சேதமடைந்ததாலும்,

பாதுகாப்பு காரணங்களாலும் கப்பல் போக்கு வரத்து 1983-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர் மாவட்டங்கள் வணிக ரீதியாக பின்னடைவைச் சந்தித் தன.

யாழ்ப்பாணத்திலுள்ள காங்கே சன்துறை பகுதி இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய இட மாகவும்,

இந்தியாவுக்கு மிக அருகில் (ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 35 நாட்டிகல் மைல்) உள்ள துறைமுகம் ஆகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது,

விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த் துவதற்காக அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் காங்கே சன்துறை துறைமுகம் பலத்த சேதமடைந்தது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சிப் பணிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம் படுத்துவதற்கு ரூ.287 கோடி நிதியை இந்தியா 2018-19-ம் ஆண்டு பட் ஜெட்டில் ஒதுக் கியது.

இந்நிலையில் மன்னாரில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது,இலங்கையை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டி யுள்ளது.

உள்நாட்டு யுத்தத்துக்கு பின்னர் வடக்கு மாகாணத்தை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பணி களை முன்னெடுத்துள்ளோம்.

இதற்காக தலைமன்னா ரிலிருந்து தமிழ்நாட்டுக்கான கப் பல் சேவையையும் காங்கேசன் துறையிலிருந்து தமிழ்நாட்டுக்கான கப்பல் சேவையையும் நடத்த உள்ளோம்.

மேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மன்னார், வவுனியா, திரிகோணமலை மாவட்டங்களுக்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள் ளோம்.

இவ்வாறு அவர் தெரி வித்தார். முன்னதாக, 2018-ம் ஆண்டு ஜனவரியில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.